இந்தப் பக்கத்தில் எனது நுண்கலை ஈடுபாடு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

  •  கல்வி சார்ந்த எனது விருப்பங்களில் மிகவும் முக்கியமானது தாய்மொழி தமிழில் எழுதுவதும் படிப்பதும்.

  • பலவேறு நாட்டவருடன் நேரிடையாக கலந்து பேசி அவர்களாது கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், புது மொழிகளில் சுவராசியமானவற்றை கற்றுக் கொள்ளவும் எப்போதும் ஆர்வமும் விருப்பமும் உண்டு.

  • சமூகம், அரசியல், அறிவியல், கலாச்சாரம் சார்ந்த தமிழ்க் கட்டுரைகள் வலைப்பூவில் எழுதுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு. 

  • கல்லூரிக் காலங்களில் ஆர்வத்துடன் தமிழ்ச் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலந்துரையாடல், கருத்துச் செறிவுள்ள குறு நாடஙகங்கள் போன்றவற்றில் நடித்த அனுபவங்கள் உண்டு. ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டபின் இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நேரம் அமைந்தால் ஈடுபடுத்திக் கொள்ள எண்ணம்.

  • பள்ளியில் பள்ளித் தலைவனாகவும், கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் அணித் தலைவனாகவும் தலைப் பொறுப்புகளில் ஆர்வமுடன் இருந்திருக்கிறேன்.

  • இளங்கலைப் படிப்பிலும், ஆசிரியர் பட்டயப் படிப்பிலும் உளவியல் கற்க வாய்ப்புக் கிடைத்ததிலிந்து, உளவியல் துறையில் அளவு கடந்த ஆர்வம் உண்டு. இதனால் கல்லூரியில் விரிவுரையாயளராய பணியாற்றிய போது இளம் மாணவர்களை புரிந்துணர்வோடு வழிகாட்ட பேருதவியாய் இருந்திருக்கிறது.


  • புகைப்படம் எடுப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று.